தமிழக அரசின் உயர்கல்வித்துறை அறிவிப்பின்படி 2020-2021 கல்வியாண்டின் முதுநிலை பாடப்பிரிவுகளில் இக்கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களுக்கான ஆன்லைன் சேர்க்கை விண்ணப்பப் பதிவுகள் 10-10-2020 முதல் 20-10-2020 வரை  www.tngasapg.in  மற்றும் www.tngasapg.org  இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். 
ஒரு கல்லூரிக்கு விண்ணப்பம் பதிவு செய்ய பதிவு கட்டணம் ரூ.2/- மற்றும் விண்ணப்பக் கட்டணம் ரூ.58/- சேர்த்து ரூ.60/- செலுத்தப்படவேண்டும். SC/ST மாணவர்களுக்கு பதிவுக்கட்டணம் ரூ.2/- செலுத்தினால் மட்டும் போதுமானது. மாணாக்கர்கள் தங்கள் சான்றிதழ்களை 15-10-2020 முதல் 20-10-2020 வரை www.tngasapg.in இணையதளத்தில் வெளியிடப்படும் அட்டவணைப்படி பதிவேற்றம் செய்யலாம். 
இக்கல்லூரியில் பயிற்றுவிக்கப்படும் முதுநிலை பாடப்பிரிவுகள்:
M.A. TAMIL
M.A. ENGLISH
M.A. HISTORY
M.A. ECONOMICS
M.A. HUMAN RIGHTS
M.Com. COMMERCE
M.Com. COOPERATION
M.A. POLITICAL SCIENCE
M.Sc. MATHEMATICS
M.Sc. STATISTICS
M.Sc. CHEMISTRY
M.Sc. BOTANY
M.Sc. COMPUTER SCIENCE
M.Sc. PHYSICS
M.Sc. ZOOLOGY
M.Sc. GEOLOGY
M.Sc. GEOGRAPHY.
இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணாக்கர்கள் 044-22351014, 044-22351015 மற்றும் 044-28276791 என்ற‌ எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு கூடுதல் விபரம் மற்றும் வழிகாட்டுதல் பெறலாம். இது தொடர்பாக care@tngasapg.org மற்றும் tndceoffice@gmail.com என்ற email முகவரி மூலமாகவும் மாணவர்கள் சந்தேகங்களைக் கேட்டு தேவையான வழிகாட்டுதல்களைப் பெறலாம்.
மேலும் மாணவர்கள் இக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட வசதி மையத்தை (DISTRICT FACILITATION CENTRE) அணுகி தங்களுடைய சந்தேகங்களைக் கேட்டு வழிகாட்டுதல் பெறலாம்.

IMG-20200723-WA0064